ஆரோவில் பாரதியார் வாழ்வாதார பூங்காவில் பொங்கல் சிறப்பு விற்பனை

வானூர்,: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், பொங்கல் சிறப்பு விற்பனை கண்காட்சி துவக்க விழா நேற்று வானூர் தாலுகா ஆரோவில் பாரதியார் வாழ்வாதார பூங்காவில் நடந்தது.

விழாவில் வானூர் ஒன்றிய சேர்மன் உஷா முரளி, மகளிர் திட்ட இயக்குநர் சுதா ஆகியோர், கண்காட்சியை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க மேலாளர் செந்தில்குமார், வட்டார இயக்க மேலாளர் ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தார்.

வரும் 13ம் தேதி வரை நடக்கும் இந்த கண்காட்சியில், சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்பட்ட பாரம்பரிய உணவுப்பொருட்கள், திண் பண்டங்கள், கண் கவர் ஆபரண வகைகள், ஆடை வகைகள், கைவினைப்பொருட்கள், மண்பாண்ட பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், மெழுகு வர்த்தி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த கண்காட்சியை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, ஆரோவில் பகுதிக்கு வரும் சுற்றுலாப்பயணிகளும் பார்வையிட்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

Advertisement