ரசனையால் வாழ்நாள் அதிகரிக்கும்  பேராசிரியர் ஞானசம்பந்தன் பேச்சு

மதுரை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர்கள் (எம்.பி.எச்.ஏ.ஏ.,) சங்கம் சார்பில் பொங்கல் விழா நடந்தது. தலைவர் ஆண்டிராஜ் தலைமை வகித்தார். செயலாளர் அன்பரசு முன்னிலை வகித்தார்.

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பேசியதாவது: ரசிக்க, ருசிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ரசனை இருந்தால் வாழ்நாள் அதிகரிக்கும். தத்துவம் மனதை ஈர்க்கும் வகையில் இருக்க வேண்டும். நீதி வழங்குவது, வழக்காடுவது சாதாரணமானதல்ல. அப்போது மூளை கூர்மையாக செயல்பட வேண்டும். வாழ்க்கை நிலையற்றது. நல்லதை பார்க்க, கேட்க வேண்டும்.

இலக்கியம், கவிதை, புராணம் என கண்டதை படிக்க வேண்டும். நாம் பேசுவது எளிய மக்களுக்கு புரிய வேண்டும் என்றார். கலை நிகழ்ச்சி நடந்தது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரகதிரவன், தமிழ் இலக்கிய மன்ற தலைவர் சாமிதுரை பங்கேற்றனர். வழக்கறிஞர் பினேகாஸ் தொகுத்து வழங்கினார்.

Advertisement