பைக் திருட்டு

மயிலம் : வீட்டின் எதிரில் நிறுத்தி வைத்திருந்த பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

தழுதாளி கிராமத்தில் வசிப்பவர் பச்சையப்பன் 23; இவருக்கு சொந்தமான சிகப்பு பைக்கை தனது வீட்டின் எதிரில் நிறுத்தி பூட்டிவிட்டு தூங்க சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் காணாமல் அதிர்ச்சியடைந்தார்.

பைக்கை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement