தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சைபர் குற்றங்கள் விழிப்புணர்வு
விழுப்புரம்: வானுார் அருகே தனியார் நிறுவன ஊழியர்களுக்கு, மாவட்ட சைபர் கிரைம் போலீசார் இணையவழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குனர் சந்திப் மிட்டல் உத்தரவின் பேரில், விழுப்புரம் மாவட்டத்தில் ஏ.டி.எஸ்.பி., தினகரன் மேற்பார்வையில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி, வானுார் அருகே ஒழிந்தியான்பட்டு கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் சைபர் கிரைம் போலீசார் ஏற்பாடு செய்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, சப்-இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் ஆகியோர், இணையவழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, இந்த நிறுவன ஊழியர்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசூரங்களை போலீசார் வழங்கினர்.
இங்கு, ஓ.டி.பி., தொடர்பான குற்றங்கள் குறித்தும், சமூக வலைதளங்களில் நடைபெறும் குற்றங்கள், போலியான ஆப்களில் பெறும் கடன்கள், போலி வேலைவாய்ப்பு குற்றங்கள், வங்கி கணக்குகளில் நடக்கும் மோசடிகள் குறித்தும் சைபர் போலீசார் விழிப்புணர்வு செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சைபர் கிரைம் இலவச உதவி எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in குறித்து விளக்கமளித்தனர்.