சக்கம்பட்டியில் விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியில் கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் கல்கோயில் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதிகளில் 3500க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. விசைத்தறி தொழிலாளர்களுக்கு இரு ஆண்டுக்கு ஒரு முறை கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும். விசைத்தறி உரிமையாளர்கள் தொழிற் சங்கங்கள் இடையே கடந்த முறை ஏற்பட்ட ஒப்பந்தம் டிசம்பர் 31ல் முடிந்தது. புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வலியுறுத்தி ஜனவரி 1 முதல் வேலைநிறுத்தம் செய்கின்றனர். பேச்சு வார்த்தை மூலம் உடன்பாடு ஏற்படவில்லை. வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசை வலியுறுத்தி சக்கம்பட்டி கல் கோயில் முன்பு விசைத்தறி தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement