கலெக்டரிடம் இந்திய கம்யூ., கட்சியினர் கோரிக்கை மனு
தேனி : இந்திய கம்யூ., ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் பிச்சைமணி, கலெக்டர் ஷஜீவனாவிடம் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதிகளில் 5000 தொழிலாளர்கள் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
தொழிலாளர் கூலி உயர்வு ஒப்பந்தம் டிச.31ல் முடிவுற்ற நிலையில் புதிய ஒப்பந்தத்திற்கு விசைத்தறி உரிமையாளர்கள் முன்வராத காரணத்தினால் ஜன.1ல் தொழிலாளர் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.
பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படவில்லை. தொழிலாளர்களின் வறுமை தீர்க்க, பொங்கல் நாளில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வண்ணம், கலெக்டர் சுமூகமான தீர்வு காண பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரினர்.
மாவட்டச் செயலாளர் பெருமாள், துணைச் செயலாளர் பரமேஸ்வரன், நகரச் செயாலளர் முனீஸ்வரன், ஒன்றியக்குழு உறுப்பினர் பழனிச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.