லாரி மோதி ஒருவர் பலி

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே காட்ரோடு ஸ்ரீராம் நகரைச் சேர்ந்தவர் சின்னன் 65. நேற்று மதியம் 2:00 மணிக்கு வீட்டுக்கு செல்லு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். கோடாங்கிபட்டியிலிருந்து


திண்டுக்கல் மாவட்டம் விருவீடுக்கு லோடு ஏற்றிச்சென்ற லாரி, சின்னன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து ஏற்படுத்திய தேனியைச் சேர்ந்த லாரி டிரைவர் ராஜ் 57.யை தேவதானப்பட்டி போலீசார் கைது செய்தனர்.

Advertisement