பள்ளி விளையாட்டு விழா
தேனி : முத்துத்தேவன்பட்டி தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு விழா உறவின்முறை தலைவர் ராஜ்மோகன் தலைமையில் நடந்தது.
துணைத் தலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர்.
பள்ளி செயலாளர் பாலசரவணக்குமார் வரவேற்றார். தெற்காசிய ஜூனியர் தடகளப் போட்டி சாதனையாளர் அபிநயா பங்கேற்று, 'கே 4' கலையரங்கம், விளையாட்டு விழாவை துவக்கி வைத்தார்.
மாணவ, மாணவிகளின் சாகச நிகழ்ச்சியில் தேனி சி.இ.ஓ., இந்திராணி பேசினார்.
ஏற்பாடுகளை இணைச் யெலாளர்கள் வன்னியராஜன், அருண்குமார், முதல்வர் ராஜேஸ்வரி, துணை முதல்வர்கள், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement