சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி : தேனி பங்களாமேட்டில் நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில், 41 மாதங்களை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.' என, வலியுறுத்தி கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்டத் தலைவர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார். தேனி வட்டக் கிளைத் தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஊழியர்கள் சங்க மாநில இணைச் செயலாளர் அழகுராஜா துவக்க உரை ஆற்றினார். சாலைப் பணியாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் முருகேசன் கோரிக்கையை விளக்கிப் பேசினார்.

மாவட்டப் பொருளாளர் பாண்டியராஜன் நன்றி தெரிவித்தார்.

Advertisement