கல்லுாரியில் 'ராகிங்' தடுப்பு ஆலோசானை

தேனி : தேனி கால்நடை மருத்துவ அறிவியல் கல்லுாரியில் ராகிங் தடுப்பு, மாணவர்கள் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் குழு கூட்டம் நடந்தது.

கல்லுாரி முதல்வர் பொன்னுத்துரை தலைமை வகித்தார். கமிட்டி உறுப்பினர் தேனி தாசில்தார் சதீஸ்குமார், வீரபாண்டி எஸ்.ஐ., பிரபு, இளைஞர்கள் பிரதிநிதியாக வைகை பெண்கள் கூட்டமைப்பின் சி.இ.ஓ., விஜயராணி, மாணவர்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவர் டாக்டர் பஷீர் அஹமது, விடுதி காப்பாளர் டாக்டர் அருளானந்தன், உதவி பேராசிரியர்கள், குழுவின் உறுப்பினர்கள், பெற்றோர் பிச்சைகண்ணன், ஆகியோர் பேசினர். ஏற்பாடுகளை கல்விப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் செல்வம் செய்திருந்தார்.

Advertisement