2024ம் ஆண்டில் 4553 குழந்தைகள் பிறந்தது; பிற மாவட்ட கர்ப்பிணிகள் வருகை அதிகம்

சிவகங்கையில் 2013 முதல் அரசு மருத்துவ கல்லுாரி செயல்படுகிறது. இங்கு பிரசவத்திற்கென அதிகளவில் கர்ப்பிணிகள் கிராமப்பகுதியில் இருந்து வருவதால், தனியாக பிரசவ கால அவசர சிகிச்சை மற்றும் மகப்பேறு பிரிவு செயல்படுகிறது. இங்கு நவீன அறுவை அரங்கு, பிரசவ வார்டுகள் உள்ளது.


குறிப்பாக கொரோனா கால கட்டத்தில் சிவகங்கை மட்டுமின்றி புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களை சேர்ந்த கர்ப்பிணிகள் அதிகளவில் பிரசவத்திற்காக இங்கு சேர்ந்தனர்.நாளுக்கு நாள் இங்கு வரும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.


மேலும் மகப்பேறு சிகிச்சை பிரிவை மேம்படுத்தும் நோக்கில், அரசு மருத்துவ கல்லுாரி அருகே கூடுதல் வசதிகளுடன்தரைத்தள, 3 மேல்தளத்துடன் கூடிய மகப்பேறு சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. விரைவில் இந்த கட்டடம் கட்டும் பணி முடிந்து, திறப்பு விழா காண உள்ளது.

இப்புதிய கட்டடத்துடன், வெளிநோயாளிகள் பிரிவு கட்டடம் வழியாக, மகப்பேறு பிரிவுக்கு கர்ப்பிணிகளை 'ஸ்டிரச்சரில்' அழைத்து செல்ல ஏதுவாக, புதிய கட்டடம்,பழைய மகப்பேறு கட்டடத்தை இணைக்கும் வகையில் 'தொங்கு பாலம்' வசதியை ஏற்படுத்த வேண்டும்.

இதனால், மகப்பேறு பிரிவு டாக்டர்கள் கர்ப்பிணிகளை புதிய, பழைய மகப்பேறு பிரிவுகளுக்கு எளிதில் அழைத்து செல்ல முடியும் என டாக்டர்கள்எதிர்பார்க்கின்றனர். அரசு இதில் தனி கவனம் செலுத்தி மகப்பேறு பிரிவு கட்டடத்தை இன்னும் மேம்படுத்த வேண்டும்.

Advertisement