சுகாதார பிரிவு பணிக்கு மாநகராட்சியில் நேர்காணல்

திருப்பூர், : மாநகராட்சி சுகாதார மையங்களில் ஊழியர் பணியிடங்களுக்காக நடந்த நேர்காணலில் நுாற்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் பங்கேற்றனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நகர்ப்புற சுகாதார மையங்களில், செவிலியர் பணியிடம் - 6, இரண்டு மருந்தாளுநர், ஆறு லேப் டெக்னீஷியன் மற்றும் நான்கு மருத்துவமனை பணியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை நியமனம் செய்ய விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது.

இதற்காக நேற்று மாநகராட்சி சுகாதாரப் பிரிவில் நேர்காணல் நடைபெற்றது. மாநகர் நல அலுவலர் முருகானந்த் தலைமையில், டாக்டர் கலைச்செல்வன் முன்னிலையில், தேர்வுக்குழுவினர், விண்ணப்பதாரர்களிடம் நேர்காணல் நடத்தினர்.

இதில், காலியாக உள்ள நியமனம் செய்யப்படவுள்ள பணியிடங்களுக்கு, 150 பேருக்கு மேல் விண்ணப்பித்து நேர்காணலில் பங்கேற்றனர். இதில், பங்கேற்றவர்களின் சான்றிதழ் சரி பார்த்து விண்ணப்பம் பெற்று நேர்காணல் நடந்தது. இதில், தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு தகவல் அளிக்கப்படும். ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்களுக்கு குறிப்பிட்ட ஊதியம் நிர்ணயித்து தற்காலிக பணி நியமனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Advertisement