ஆம்னி பஸ்சில் கூடுதல் கட்டணம் புகார் தெரிவிக்க எண்கள் வெளியீடு 

திருப்பூர், : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து கண்காணிக்க, ஆர்.டி.ஓ., தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசு சிறப்பு பஸ் கூடுதல் கட்டண வசூல் குறித்து புகார் தெரிவிக்கவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பொங்கல் சிறப்பு பஸ் இயக்கம் நேற்றிரவு துவங்கியது. வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக நாளை, வரும் திங்கள் கிழமை கூடுதலாக பஸ்கள் இயங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சிறப்பு பஸ்களில் பயணிப்பவர்கள் ஏதேனும் அசவுகரியம் நேரிட்டால், உத்தேசிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால், பயணிகள் 94450 14436, 044 24749002 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இயங்கும் ஆம்னி பஸ்கள், ஆம்னி பஸ்களின் டிக்கெட் கட்டணத்தை கண்காணிக்க குழு அமைக்க போக்குவரத்து துறை மண்டல இணை கமிஷனர் அறிவுறுத்தியிருந்தார். அதனை ஏற்று, தெற்கு ஆர்.டி.ஓ., ஆனந்த், வடக்கு ஆர்.டி.ஓ., ஜெயதேவராஜ், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அடங்கிய நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. குழுவினர் இன்று இரவு முதல் வரும், 13ம் தேதி இரவு வரை, ஜன., 17 முதல், 19 வரை ஆம்னி பஸ்களின் இயக்கம், டிக்கெட் கட்டணம் குறித்து கண்காணிப்பர்.

கூடுதல் கட்டணம் வசூலித்தது கண்டறியப்பட்டால், அபராதம் விதிக்கப்படும். பர்மிட் ரத்து செய்யப்படுமெனஅறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement