தமிழக பள்ளிகளில் ஆராய்ச்சி கூடம்

பெ.நா.பாளையம் : தமிழக பள்ளிகளில் ஆராய்ச்சி கூடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

துடியலூர் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள கங்கா செவிலியர் கல்லூரியில் மாணவர் மேம்பாடு குறித்த கருத்தரங்கு நடந்தது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நிருபர்களிடம் பேசுகையில், இந்தியா, விண்வெளியில் விவசாய பயிர்களை விளைவிக்கும் காலம் விரைவில் வரும்.

ஏ.ஐ., தொழில் நுட்பம் படிக்கும் மாணவர்கள், அதைப்பற்றி முழுமையாக கற்று அறிந்தபின், அவற்றின் செயல்பாடு குறித்து ஆராய்ந்து படிக்க வேண்டும். தமிழகத்தில், 2 ஆயிரம் பள்ளிகளில் விவசாயம் முதல் விண்வெளி வரை என்ற ஆராய்ச்சி கூடம், 500 கோடி ரூபாய் செலவில் அமைக்க, மாநில அரசுடன் இணைந்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய மயில்சாமி அண்ணாதுரை, 'டெலி சர்ஜரி மற்றும் சர்ஜிகல் ரோபோ சிகிச்சை தற்போது சாத்தியமாகியுள்ளது. நர்சிங் துறையில் ஏ.ஐ., டெக்னாலஜிபயன்படுத்தும் முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாழ்க்கையில் முன்னேற எப்போதும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும்' என்றார்.

நிகழ்ச்சியில், கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் கனகவல்லி சண்முகநாதன், இயக்குனர்கள் ரமா ராஜசேகர், நிர்மலா ராஜசபாபதி, கல்லூரி முதல்வர் எஸ்தர் ராகேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement