ராதா மாதவ திருக்கல்யாண மகோற்சவம் இன்று துவக்கம்

புதுச்சேரி: வேதபாரதி சார்பில் உலக நன்மை வேண்டி இரு நாள் நடக்கும், ராதா மாதவ திருக்கல்யாண மகோற்சவம் இன்று துவங்குகிறது.

நாட்டின் பண்பாடு, கலாசாரத்தை காக்கும் பணியை புதுச்சேரியில் கடந்த 7 ஆண்டுகளாக வேத பாரதி செய்து வருகிறது.

அடுத்த தலைமுறையினர் நெறி சார்ந்த பாதையில் செல்லவும், பாரம்பரிய கலாசாரம் அறிந்து கொள்ளும் வகையில், பள்ளி மாணவ, மாணவிகளை ஒருங்கிணைத்து, கடந்த 1ம் தேதி மார்கழி மாத பஜனை நடத்தியது.

அதன் தொடர்ச்சியாக, உலக நன்மை வேண்டி, 3ம் ஆண்டு ராதா மாதவ திருக்கல்யாண மகோற்சவம், புதுச்சேரி சித்தன்குடி, ஜெயராம் திருமண மண்டபத்தில் இன்று மற்றும் நாளை 12ம் தேதி நடக்கிறது.

இன்று காலை 8:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வேத பாராயணத்துடன் விழா துவங்குகிறது. காலை 10:30 மணி முதல் பகல் 1:30 மணி வரை நாம சங்கீர்த்தனமும், மாலை 4:30 மணி முதல் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், மகா மந்தர அகண்ட பாராயணம் நடக்கிறது.

மாலை 6:00 மணிக்கு அஷ்டபதி, தரங்கம், பஞ்சபதி, கணேசாதி தியானம், பூஜை, திவ்யநாமம் நடக்கிறது.

நாளை 12ம் தேதி காலை 6:00 மணி முதல் தனுர்மாத பஜனை, உஞ்சவ்ருத்தி, திவ்ய நாமம், அஷ்டபதி, ராதா மாத திருக்கல்யாணம், ஆஞ்சநேயர் உற்சவம், மங்கள ஆரத்தி நடக்கிறது.

விழாவில் கடையநல்லுார் ராஜகோபால்தாஸ் பாகவதர் மற்றும் அவரது குழுவினர் பங்கேற்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வேதபாரதி அமைப்பினர் செய்து வருகின்றனர்.

Advertisement