இங்கு பொங்கல்... அங்கு மகர சங்கராந்தி

சங்க காலம் தொட்டு இன்றுவரை, பொங்கல் திருநாளே, தமிழரின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை சிறப்பித்துக் காட்டுகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் காலங்காலமான நம்பிக்கை. இதனால் தான், இந்த திருநாள், தமிழர்களின் மத்தியில் ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும்.

உலகெங்கிலும் உள்ள தமிழர்களால், பொங்கல் திருநாள், சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் சூரியபகவானுக்கு நன்றி தெரிவிக்கும் நாள் இது. இந்தியாவின் வட மாநிலங்களில் இது, மகர சங்கராந்தி எனவும், ஷங்கராந்தி எனவும் கொண்டாடப்படுகிறது.

மகரம் என்றால் சூரியன் என்று பொருள். சூரியன் தனுசு ராசியில் இருந்து, மகர ராசியின் நுழைவதன் வாயிலாக, உத்தரயானத்தில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் துவங்குகிறது. எனவே தான், இதை மகர சங்கராந்தி என அழைக்கின்றனர்.

Advertisement