அந்த திட்டம் வந்தால் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டசபையில் மீண்டும் சொன்னார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: 'தமிழகத்தில் மாணவிகள் என்னை அப்பா, அப்பா என்று அழைக்கும் போது அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுகிறது' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சட்டசபை கூட்டத் தொடரின் கடைசி நாளில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சட்டசபை உறுப்பினர்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். திட்டமிட்டு கவர்னர் விதிமீறலில் ஈடுபடுகிறார். அரசு அளிக்கும் அறிக்கையை முழுமையாக வாசிக்க வேண்டிய கடமை கவர்னருக்கு உள்ளது. தமிழகம் வளர்ந்து வருவதை கவர்னரால் ஜீரணிக்க முடிய வில்லை என தெரிகிறது. தமிழ்த்தாய் வாழ்த்தை அரசியல் நோக்கத்தோடு அவமதித்தால் கவர்னர் பதவிக்கு இழுக்கு.
7வது முறையாக ஆட்சி
வரும் தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்று, 7வது முறையாக ஆட்சி அமைக்கும். நான் செல்லும் இடங்களில் மக்கள் முகங்களில் தெரியும் மகிழ்ச்சியை விடியலின் சாட்சி. மகளிருக்கு கட்டணமில்லா இயக்கப்படும் பஸ்களுக்கு 'ஸ்டாலின் பஸ்' என்றே பெயர் வைத்து விட்டனர். மாதம் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தால் மாணவிகள் உயர் கல்வி படிப்பது 30 சதவீதம் அதிகரித்துள்ளது. கல்லூரி மாணவிகளுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ், மாதம் ரூ.ஆயிரம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் மாணவிகள் என்னை அப்பா, அப்பா என்று அழைக்கும் போது அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுகிறது.
தவறு அல்ல
திராவிடம் என்ற சொல்லை பார்த்து சிலர் பயப்படுகின்றனர். அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான வளர்ச்சியை திராவிடம் மாடல். நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி தமிழகத்தின் பங்கு 5.4 சதவீதமாக உள்ளது. நாட்டின் வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. நாடு முழுவதும் பணம் வீக்கம் அதிகரித்து நிலையில் தமிழகத்தில் பணவீக்கம் குறைந்துள்ளது. மனித வளத்தை வளர்ப்பதில் மஹாராஷ்டிரா, குஜராத்தை விட தமிழகம் முன்னணியில் உள்ளது. போராட்டம் நடத்துவது தவறு அல்ல.
தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி வந்த பெண் சுமார் ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சட்டசபைக்கு அ.தி.மு.க.,வினர் கருப்பு சட்டை அணிந்து வந்த போது கோபம் வரவில்லை. சிரிப்பு தான் வந்தது. மத்திய அரசு கல்விக் கொள்கையை கண்டித்து அ.தி.மு.க.,வினர் கருப்பு சட்டை அணிந்து இருந்தால் மகிழ்ந்திருப்பேன். குற்றங்கள் குறைந்து தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. போராட்டம் நடத்துவது தவறு அல்ல. அனுமதிக்கப்பட்ட இடத்தில் அனுமதியோடு போராட வேண்டும்.
நிதி இல்லை
நிதி பற்றாக்குறைக்கு மத்தியிலும் மக்கள் நலத்திட்டங்களை அரசு நிறைவேற்றி வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 12,000 கோப்புகளில் கையெழுத்திட்டு உள்ளேன். நிதி இல்லாத காரணத்தினால் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற முடியவில்லை. நிதி ஒதுக்காமல் மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. நிதி பற்றாக்குறைக்கு மத்தியிலும் மக்கள் நலத்திட்டங்களை அரசு நிறைவேற்றி வருகிறது. கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கருணை இருக்கிறது. ஆனால் போதிய நிதி இல்லை. அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற முடியவில்லை
சிறப்பு நீதிமன்றங்கள்
டங்ஸ்டன் திட்டம் குறித்து மீண்டும் பேசி மக்களை குழப்புகின்றனர். மத்திய அரசின் சுரங்கத் திட்டத்திற்கு ஆதரவளித்து துரோகம் செய்தது அ.தி.மு.க., டங்ஸ்டன் திட்டம் வந்தால் நான் பதவியில் இருக்க மாட்டேன். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க 7 தனி சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்கப்படும்.
சென்னை, மதுரை, நெல்லை, கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் தனி நீதிமன்றம் அமைக்கப்படும். மாவட்டம் தோறும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் குழு அமைக்கப்படும். 3,000 புதிய பஸ்கள் கொள்முதல் செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.