கமலா காமேஷூக்கு குறித்து பரவிய செய்தி; மகள் உமா ரியாஸ் சொன்னது இதுதான்!
சென்னை: நடிகை கமலா காமேஷ் உடல்நலம் குறித்து, பரவிய வதந்திக்கு தற்போது அவரின் மகள் உமா ரியாஸ் கான் முற்று புள்ளி வைத்துள்ளார்.
நடிகை கமலா காமேஷ் உடல்நலக் குறைவால் இன்று (ஜன.,11) சென்னையில் காலமானதாக செய்திகள் பரவியது. இந்த தகவல் உண்மையில்லை என்பதை கமலா காமேஷின் மகள் உமா தெளிவுபடுத்தி உள்ளார்.
அதே நேரம் இறந்தது, தன்னுடைய அம்மா இல்லை என்றும்... ரியாஸ்கானின் அம்மா தன்னுடைய மாமியார் தான் இறந்து விட்டதாக கூறியுள்ளார். என்னுடைய மாமியார்
ரஷிதா பானுதான் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதன் மூலம் கமலா காமேஷ் இறந்ததாக வெளியான தகவல் வதந்தி என்பது தெரியவந்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement