கட்டடத்தின் வலிமையை நிர்ணயிக்கும் 'பவுதீகம்'; கட்டட ஆலோசகர்கள் தேர்வில் தேவை கவனம்

கட்டுமான பணியானது தனியாக எவராலும் செய்ய முடியாத ஒன்று. இக்கட்டுமான தொழிலில் படித்தவர் முதல் படிக்காதவர்கள் வரை, எல்லோருடைய பங்களிப்பும் முக்கியத்துவம் பெறுகிறது. அனைவரும் ஒரே நோக்கத்தோடு, ஒற்றுமையாக செயல்பட்டால் மட்டுமே, தரமான கட்டுமானம் சாத்தியமாகும்.


தலைமை பொறியாளர், மக்களின் தேவைக்கேற்ப கட்டடங்களின் பல்வேறுப்பட்ட பண்புகளை நிர்ணயித்து, அதற்கு தேவையான கட்டுமான பொருட்களை தேர்வு செய்தும், பலவகையான கட்டட ஆலோசகர்களை நியமித்தும் செயல்படுவார்.


அப்படி தேர்வு செய்த வல்லுனர்களுக்கு, கட்டட உரிமையாளர் முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். இல்லையேல் ஏற்படும் பின்விளைவுகள், கட்டட உரிமையாளரை பாதிக்கும் என்கிறார், 'கொசினா' உறுப்பினர் மாரிமுத்துராஜ்.

அவர் கூறியதாவது:

கட்டட அமைப்பு கலைஞர்கள்(ஆர்க்கிடெக்ட்ஸ்) தற்கால கட்டடக்கலை, புதுமையான கட்டடக்கலை, பாரம்பரிய கட்டடக்கலை, எதிர்கால கட்டடவியல், மக்கள் பழக்கம் வழக்கம் சார்ந்த கட்டடக்கலை, நில வடிவமைப்புக்கலை போன்ற இன்னும் பல துறைகளாக பெருகி உள்ளனர்.

கட்டுமான பொறியாளர்கள் காலத்திற்கேற்ப, தொழில்நுட்பங்களை மக்களுக்கு வழங்குகின்றனர். அடித்தள தொழில்நுட்ப பொறியாளர்கள் ஒரு கட்டட அமைப்பிற்கு ஏற்ப, அந்த கட்டடம் அமைக்கும் இடத்தின் மண் வகைகளையும், நீர் வரத்து, மண்ணின் நீர் ஊடுருவும் தன்மை போன்றவற்றுக்கு ஏற்ப, கட்டடத்தின் அடித்தளத்தை அமைத்து தருவார்கள். கட்டுமான உறுதிப் பொறியாளர்கள், கட்டட அமைப்பிற்கேற்ப செங்கல், சிமென்ட்டை தேர்வு செய்வது, கம்பிகளின் அமைப்பு முறைகளை கணக்கிட்டு வடிவமைப்பு வழங்குவார்கள்.

கணக்கியல், பவுதீகம் போன்றவற்றை பயன்படுத்தி, கட்டட வலிமையை நிர்ணியிப்பார்கள். மின் இணைப்பு, வடிகால் மற்றும் குடிநீர் அமைப்பு வல்லுனர்கள் அமையவிருக்கும் கட்டடத்தின் தேவைக்கேற்ப சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு, கட்டடத்தின் குடிநீர் மற்றும் வடிகால் குழாய்களின் வடிவமைப்பை, கணக்கிட்டு தீர்மானிப்பார்கள். கட்டுமான மேலாண்மை வல்லுனர்கள், அனைத்து வல்லுனர்களையும் ஒருங்கிணைத்து, கட்டுமான தேவையை, பொருள் மற்றும் பண விரயமில்லாமல், குறிப்பிட்ட நேரத்தில் கட்டடம் கட்டி முடிக்க உதவுகின்றனர். இவர்கள் தவிர, இன்னும் பல வல்லுனர்களை ஒருங்கிணைத்தால் சிறப்பாக இருக்கும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

கட்டட அமைப்பு கலைஞர்கள்(ஆர்க்கிடெக்ட்ஸ்) தற்கால கட்டடக்கலை, புதுமையான கட்டடக்கலை, பாரம்பரிய கட்டடக்கலை, எதிர்கால கட்டடவியல், மக்கள் பழக்கம் வழக்கம் சார்ந்த கட்டடக்கலை, நில வடிவமைப்புக்கலை போன்ற இன்னும் பல துறைகளாக பெருகி உள்ளனர்.

Advertisement