தீவிரவாத தடுப்புக்கு கூடுதல் எஸ்.பி., பொறுப்பேற்பு

கோவை : கோவை தீவிரவாத நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில், தீவிரவாத தடுப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. இதன் எஸ்.பி.,யாக, பத்ரிநாராயணன் உள்ளார். இந்நிலையில், டி.எஸ்.பி.,யாக இருந்து பதிவு உயர்வு பெற்ற ஆனந்தகுமார், தீவிரவாத தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி.,யாக நேற்று பொறுப்பேற்றார்.

இவர் இதற்கு முன், கோவையில் சிறப்பு நுண்ணறிவு பிரிவு டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்தார். பின், பணி இடமாற்றத்தில் சேலம் சென்றார். தற்போது, தீவிரவாத தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி.,யாக, நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement