60 பயனாளிகளுக்கு ரூ. 1.61 கோடி நலத்திட்ட உதவி

ஊட்டி -: கக்குச்சி கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில், 60 பயனாளிகளுக்கு 1.61 கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஊட்டி ஊராட்சி ஒன்றியம் கக்குச்சி ஊராட்சி சமுதாய கூடத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்து, 60 பயனாளிகளுக்கு 1.61 கோடி ரூபாயில் அரசு நிலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கலெக்டர் லட்சுமி பவ்யா பேசுகையில், ''மாநில அரசு உத்தரவுப்படி ஒவ்வொரு மாதமும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் நேரடியாக கிராமப் பகுதிகளுக்கு சென்று மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்படுகிறது.

''அதில், அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிப்பதோடு தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவது தான் மக்கள் தொடர்பு முகாமின் முக்கிய நோக்கமாகும்.

பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் அனைத்து மனுக்களும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அனுப்பி வைத்து மனு மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.

முகாமில், ஊட்டி ஆர்.டி.ஓ., சதீஷ்குமார், தோட்டக்கலைத் துறை இணை இயக்குனர் சிபிலா மேரி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் செந்தில்குமார் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement