பேச்சுவார்த்தை எதிரொலி வேலை நிறுத்தம் 'வாபஸ்'
திருப்பூர் : பேச்சுவார்த்தை நடத்தி, உறுதி அளித்துள்ளதால், 20ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக, பி.எம்.எஸ்., மின் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஏழு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்த, பி.எம்.எஸ்., மின் தொழிலாளர்கள் முடிவு செய்திருந்தனர். போராட்ட அறிவிப்பு எதிரொலியாக, தொழிலாளர் துணை கமிஷனர் அலுவலர் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். சென்னையில் உள்ள, தொழிலாளர் துணை கமிஷனர் அலுவலகத்தில், பி.எம்.எஸ்., தொழிற்சங்க மின் தொழிலாளர்கள், எதிர்பார்க்கப்படும் ஏழு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தனர். மின்வாரிய தரப்பிலும் விவரம் கேட்டறியப்பட்டது.
கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி எடுப்பதாக உறுதி அளித்து, இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை, 18ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
அதன்படி, 20ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த ஒரு நாள் வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக, பி.எம்.எஸ்., தொழிற்சங்கத்தின் திருப்பூர் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.