அவிநாசி தாலுகா ஆபீசில் நாளை ஆதார் சிறப்பு முகாம்
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், அரசு கேபிள் டிவி நிறுவன கட்டுப்பாட்டில், திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம், அவிநாசி, தாராபுரம், காங்கயம், உடுமலை, மடத்துக்குளம், ஊத்துக்குளி ஆகிய ஒன்பது தாலுகா அலுவலகங்களிலும், நிரந்தர ஆதார் பதிவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. சுழற்சி முறையில், வாரம் ஒரு மையத்தில், ஞாயிற்றுக்கிழமை தோறும், ஆதார் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அவ்வகையில், நாளை (12ம் தேதி), அவிநாசி தாலுகா அலுவலகத்திலுள்ள மையத்தில், ஆதார் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. காலை, 8:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடைபெறும் முகாமில், புதிய ஆதார் பதிவு, ஆதாரில் பெயர், முகவரி, மொபைல் எண் மாற்றம், புகைப்படம் புதுப்பித்தல் மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் சிறப்பு முகாமில் பங்கேற்று, உரிய ஆவணங்கள் மற்றும் கட்டணம் செலுத்தி, ஆதாரில் திருத்தத்துக்கு விண்ணப்பிக்கலாம், என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.