போலீஸ் ஸ்டேஷனில் கொள்ளை முயற்சி; தடுக்க முயற்சித்த போலீஸ் மீது தாக்குதல்
தேனி: தேனி போதைப்பொருள் நுண்ணறிவு போலீஸ் ஸ்டேஷனில் திருட முயன்ற போது, அதனை தடுத்த போலீசார் மீது கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஈஸ்வர் நகரில் போதைப்பொருள் நுண்ணறிவு போலீஸ் ஸ்டேஷன் அமைந்துள்ளது. இங்கு சட்டவிரோதமாக விற்பனை மற்றும் கடத்தி வரப்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்படுவது வழக்கம். இந்த சூழலில், மாடி வழியாக அந்த ஸ்டேஷனின் உள்ளே மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், போதைப்பொருள் நுண்ணறிவு போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைந்து வந்துள்ளனர். இதனை அறிந்த கொள்ளையர்கள், உடனடியாக அங்கிருந்து தப்பியோட முயன்றனர். அப்போது, அவர்களை போலீஸ்காரர் ஒருவர் மடக்கி பிடிக்க முற்பட்டார். இதனை பார்த்து உஷாரான கொள்ளையர்கள், அந்த போலீசாரை பயங்கரமாக தாக்கி விட்டு, தப்பியோடினர். இதில், போலீஸ்காரர் பலத்த காயமடைந்தனர். ஆனால், அதன் பின்னால் வந்த மற்ற போலீஸார், சாதுர்யமாக செயல்பட்டு, அந்த கொள்ளையர்களை பிடித்தனர்.
பின்னர், இருவரையும் கைது செய்து அல்லிநகரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். அவர்களிடம், பெரியகுளம் டி.எஸ்.பி., நல்லு விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்டேஷனில் இருக்கும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை எடுத்துச் செல்ல இவர்கள் வந்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து (14)
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
11 ஜன,2025 - 14:51 Report Abuse
போலீஸ் ஸ்டேஷனில் நுழைந்து தாக்கும் தைரியம் வருகிறது என்றால் , ஒருக்கால் , ஜாபர் சாதிக் , அமீர் , டிக்கி கும்பலோடு தொடர்புடையவர்கள் , அல்லது சின்ன பெரியவரின் புன்புலம் இருக்கிறதா என்பதையும் போலீஸ் பார்க்கவேண்டும் .....சின்ன பெரியவரை மீறி போலீசும் செயல்பட இயலாது என்பது வெள்ளிடை மலை .
0
0
Reply
Nandakumar Naidu. - ,
11 ஜன,2025 - 14:01 Report Abuse
அவர்களின் கை கால்களை உடைக்க வேண்டும். மீண்டும் எழுந்து நடமாடக்கூடது.
0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
11 ஜன,2025 - 14:00 Report Abuse
திருப்பதிக்கே லட்டா...?
0
0
Reply
நாஞ்சில் நாடோடி - Hydarabad,இந்தியா
11 ஜன,2025 - 13:50 Report Abuse
இதைத்தான் திராவிட மாடல் என்று சொல்கிறார்கள்...
0
0
Reply
Karthik - ,இந்தியா
11 ஜன,2025 - 13:46 Report Abuse
இந்த சம்பவத்தில் யாருக்கு தெளிவான திட்டமிடலும் , தைரியமும் , துணிச்சலும் இருக்கிறதோ அவரே காவல்துறை பணிக்கு தகுதியுடையவர்.
0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
11 ஜன,2025 - 13:40 Report Abuse
விடியாலோ விடியல். சமூக நலத்திட்டங்களை தொடர்ந்து நடத்த ஒப்பந்த அடிப்படையில் ஞானசேகரன் போன்ற சமூக தீவிரவாதிகளை வைத்து கொள்ளையடிக ஏற்பாடு செய்தால் அடுத்து அவர்கள் குழுமம் மந்திரி வீட்டில் கூட கொள்ளை அடிப்பார்கள். கேப்மாரி உடன் பிறப்புக்கள் இதற்கும் கூட வெட்கமில்லாமல் முட்டுக்கொடுப்பார்கள்...
0
0
Reply
ராமகிருஷ்ணன் - ,
11 ஜன,2025 - 13:38 Report Abuse
இதெல்லாம் விடியல் அரசின் சாதனைகள் என்று கல்வெட்டுகளில் பொறித்து வைக்க வேண்டும். எதிர்காலத்தில் மக்கள் படித்து துப்ப உதவும்
0
0
Reply
Perumal Pillai - Perth,இந்தியா
11 ஜன,2025 - 13:30 Report Abuse
இதுவும் Flight Mode சமாச்சாரம் போல தான் தெரிகிறது . கடவுளுக்கு மட்டும் தான் தெரியும் .
0
0
Reply
p.s.mahadevan - ,இந்தியா
11 ஜன,2025 - 13:23 Report Abuse
காவல் நிலையத்தையே தாக்கும் அளவுக்கு தைரியம் அளிக்கக் கூடிய அளவுக்கு நாட்டில் ஆட்சி உள்ளது என்பது வருத்தம் அளிக்கிறது.
0
0
Kasimani Baskaran - Singapore,இந்தியா
11 ஜன,2025 - 14:04Report Abuse
நீங்க வருந்துங்க . உடன் பிறப்புக்கள் காசுக்கு ஓட்டை மட்டுமல்ல மானத்தையும் விற்று காசாக்கி விடுவார்கள்.
0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
11 ஜன,2025 - 13:19 Report Abuse
ஆஹா இதுதாண்டா திராவிட மாடல் அரசின் சிறப்பு அம்சம் பிடிபட்டவனை தூக்கிடவேண்டும் நீதி மன்றத்திற்கு அழைத்து செல்வது பிறகு வாய்தா வாங்குவது இதுயெல்லாம் இந்த காலத்திற்கு ஒவ்வாதவைகள் கடும் தண்டனை கொடுத்தால் மட்டுமே போதைபொருள் நடமாட்டாதே அழிக்கமுடியும்
0
0
Reply
மேலும் 3 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement