சத்தீஸ்கரில் கட்டுமானப்பணியில் விபத்து: 2 பேர் பலி; 8 பேர் காயம்

ராய்ப்பூர்: ராய்ப்பூரில் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் பலியாகினர். 8 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் கூறியதாவது:
ராய்ப்பூரில் விஐபி சாலையில் உள்ள விஷால் நகர் பகுதியில் பல மாடி கட்டடம் கட்டப்பட்டு வரும் இடத்தில் இந்த சம்பவம் நடந்தது. முதற்கட்ட தகவலின்படி, பிற்பகல் 3:30 மணியளவில் கட்டடத்தின் 7வது மற்றும் 10வது தளங்களுக்கு இடையில் ஒரு ஸ்லாப் அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது, ​​சென்ட்ரிங் பிரேம் இடிந்து தரையில் விழுந்தது.

இடிபாடுகளில் சிக்கியவர்களில் இருவர் உயிரிழந்தனர். காயமடைந்த 8 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். அனைவரும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கக்கூடிய மேலும் சில தொழிலாளர்களை வெளியேற்றுவதற்காக மீட்புப் பணிகள் சம்பவ இடத்தில் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement