உலகின் முன்னணி பொருளாதார நாடுகள்: டாப் 10 பட்டியல் இதோ!

3

புதுடில்லி: 2025ம் ஆண்டின், உலகின் டாப் 10 பொருளாதார நாடுகளின் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்தியா ஐந்தாவது இடத்திலேயே தொடர்கிறது என்பது ஐ.எம்.எப்., வெளியிட்ட தகவல்களில் இருந்து தெரியவந்துள்ளது.


ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பயன்படுத்தி அதன் பொருளாதார அளவு மதிப்பிடப்படுகிறது. ஜிடிபியின் அடிப்படையில் உலகின் முதல் பத்து நாடுகளின் பட்டியல் வெளியாகி உள்ளது.

2021ம் ஆண்டின் கடைசி 3 மாதங்களில், இந்தியப் பொருளாதாரம் பிரிட்டனைவிட வளர்ச்சி அடைந்தது. இதனால் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் 6வது இடத்தில் இருந்த இந்தியா, பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளி 5வது இடத்துக்கு முன்னேறியது. நடப்பாண்டும் 4.27 டிரில்லியன் டாலர் ஜி.டி.பி., வளர்ச்சி உடன் 5ம் இடத்திலேயே தொடர்கிறது இந்தியா.


சர்வதேச செலாவணி நிதியம் ( ஐ.எம்.எப்., ) தரவுகளின் படி, உலகின்
டாப் 10 பொருளாதார நாடுகள்:

1.அமெரிக்கா- 30.34 டிரில்லியன் டாலர்.


2.சீனா- 19.53 டிரில்லியன் டாலர்


3. ஜெர்மனி- 4.92 டிரில்லியன் டாலர்


4. ஜப்பான்- 4.39 டிரில்லியன் டாலர்


5. இந்தியா- 4.27 டிரில்லியன் டாலர்


6. யுனைடெட் கிங்டம்- 3.73 டிரில்லியன் டாலர்


7.பிரான்ஸ்- 3.28 டிரில்லியன் டாலர்


8.இத்தாலி- 2.46 டிரில்லியன் டாலர்


9.கனடா- 2.33 டிரில்லியன் டாலர்


10. பிரேசில்- 2.31 டிரில்லியன் டாலர்

Advertisement