மாணவிகளை சட்டையை கழற்றச் செய்து வீட்டிற்கு அனுப்பிய தலைமை ஆசிரியர்: ஜார்க்கண்டில் அதிர்ச்சி

ராஞ்சி: ஜார்க்கண்ட்டின் தான்பாத் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பள்ளி மாணவிகளை, சட்டையை கழற்றிவிட்டு, பிளேசருடன்( சட்டை மேல் அணியும் கோட்) அனுப்பிய தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசில் பெற்றோர்கள் புகார் அளித்து உள்ளனர்.



ஜார்க்கண்டில் தான்பாத் மாவட்டத்தில் புகழ்பெற்ற பள்ளி உள்ளது. இங்கு 10ம் வகுப்பு படிக்கும் 100க்கும் மாணவிகள் கடந்த வியாழன் அன்று, தேர்வு முடிந்த மகிழ்ச்சியை ' penday' என்ற பெயரில் கொண்டாடி உள்ளனர். அப்போது ஒவ்வொரு மாணவியும் மற்ற மாணவியின் சட்டையில் வாழ்த்து வாசகங்களை எழுதி உள்ளனர்.இதனை பார்த்த தலைமை ஆசிரியர், அவர்களை திட்டி உள்ளார். பிறகு அந்த சட்டையை கழற்ற செய்ததுடன் மீண்டும் அதனை அணிய அனுமதிக்கவில்லை.


பிளேசரை மட்டும் அணிந்து வீட்டிற்கு அனுப்பி உள்ளார். வீட்டில் அரைகுறை ஆடையுடன் வந்த குழந்தைகளை பார்த்த பெற்றோருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த மாணவிகள், இதனை சமூக வலைதளம் மூலம் புகார் கூறி வீடியோ வெளியிட்டு கண்ணீர் வடித்தனர்.
இது தொடர்பாக பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த துணை கமிஷனர் மாதவி, குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தார்.

Advertisement