உலக அமைதிக்காக 8,000 கி.மீ., தூரம் நடைபயணமாக சபரிமலை வந்த பக்தர்கள்

2

சபரிமலை: உலக அமைதிக்காக 8 ஆயிரம் கி.மீ., தூரம் நடைபயணமாக வந்து சபரிமலையில் இரண்டு பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சனத்குமார் நாயக் மற்றும் சம்பத்குமார் ஷெட்டி. இவர்கள் உலக அமைதிக்காக சபரிமலைக்கு நடைபயணம் மேற்கொண்டு வழிபாடு நடத்த வேண்டும் என முடிவு செய்தனர்.

இதற்காக கடந்த ஆண்டு மே 26 ல் கேரளாவில் இருந்து பத்ரிநாத்திற்கு ரயில் மூலம் சென்றனர். அங்கிருந்து இருமுடி கட்டி ஜூன் 3ம் தேதி தங்களது பயணத்தை இருவரும் துவக்கினர். வழியில், பல்வேறு ஆன்மிக ஸ்தலங்கள் மற்றும் கோவிலுக்குள் சென்ற அவர்கள், சங்கராச்சாரியார் உருவாக்கிய மடங்களுக்கும் சென்றனர். வழியில் பல்வேறு கோயில்களில் தங்கிய அவர், அங்கேயே சமைத்து சாப்பிட்டனர். அயோத்தி, உஜ்ஜயினி, புரி, சிவசங்கர், ஜகன்நாத், ராமேஸ்வர், அச்சன்கோவில், எருமேலி வழியாக சபரிமலை வந்த இவர்கள் உலக அமைதி வேண்டி ஐய்யப்பனிடம் வேண்டிக் கொண்டதாக இன்று சபரிமலை தேவஸ்தானம் கூறியுள்ளது.

Advertisement