ஆர்.டி.மலையில் ஜல்லிக்கட்டு விழா; ஆய்வு செய்த கலெக்டர்

குளித்தலை: குளித்தலை அடுத்த,ஆர்.டி.மலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கிராம மக்கள் சார்பாக, 63ம் ஆண்டு ஜல்லிக்கட்டு விழா வரும், 16ல் நடைபெற உள்ளது.
இதற்கான பணிகள் நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டு நடை-பெறும் இடத்தை நேற்று கலெக்டர் தங்கவேல் ஆய்வு செய்தார். இதில் வாடிவாசல், காளை வரும் பாதை, மாடுபிடி வீரர்களுக்கான இடம், பார்வையாளர்களுக்கான இடம், வாடிவா-சலில் இருந்து அவிழ்த்து விடப்படும் ஜல்லிக்கட்டு காளை இறு-தியாக நிற்கும் இடம், தடுப்பு வேலிகள், மருத்துவ சேவைக்கான இடம், பரிசு வழங்கும் இடம், அவசர வழி, வாகனங்கள் நிறுத்தும் இடம், மின் இணைப்பு, தீயணைப்பு, ஆம்புலன்ஸ் நிறுத்தும் இடம், போலீஸ் கன்ட்ரோல் ரூம் என அனைத்து பகுதி-களையும் தனித்தனியாக ஆய்வு செய்து, விழா கமிட்டியாளர்க-ளிடம் கேட்டறிந்தார்.


டி.ஆர்.ஓ., கண்ணன், சப் - கலெக்டர் சுவாதிஸ்ரீ, கால்நடைத்-துறை மண்டல இணை இயக்குனர் சாந்தி, மருத்துவ இணை இயக்குனர் செழியன், திட்ட இயக்குனர் ஸ்ரீரேகா தமிழ்செல்வன், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் சரவணன், தாசில்தார் இந்து-மதி, தோகைமலை பி.டி.ஓ., ராஜேந்திரன் உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களை கூட்டாக ஆய்வு செய்தனர்.விழாக்குழு தலைவர் சங்ககவுண்டர், மாஜி யூனியன் குழு தலைவர் சுகந்தி சசிகுமார், பொறுப்பாளர் அண்ணாத்துரை, சின்-னையன், சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement