மின்ஒயர் திருட்டு ஒருவர் கைது

கடலுார் : கடலுார் அருகே மின் மோட்டார் ஒயரை திருடியவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கடலுார் அடுத்த கண்டக்காட்டை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்,54. அதே கிராமத்தில் உள்ள அவருக்கு சொந்தமான வயலில் உள்ள மோட்டார் கொட்டகையில் நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு வாலிபர் ஒருவர் மின் ஒயரை திருடிக்கொண்டிருந்தார்.

ரவிச்சந்திரன் மற்றும் அருகில் இருந்தவர்கள் அந்த வாலிபரை பிடித்து தேவனாம்பட்டினம் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், அந்த வாலிபர் விழுப்புரம் மாவட்டம், மதியனுாரை சேர்ந்த சிவக்குமார்,23, என்பதும், ஒரண்டாக குண்டு உப்பலவாடியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருப்பதும் தெரிந்தது. இதுகுறித்து தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிந்து, சிவக்குமாரை கைது செய்தனர்.

Advertisement