மின் சிக்கன வாரவிழா போட்டி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

ராமநாதபுரம் : மாவட்ட மின்பகிர்மானகழகம், கல்வித்துறை சார்பில் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆற்றல் மன்றம் சார்பில் நடந்த மின்சிக்கன வாரவிழா போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா ராமநாதபுரத்தில் நடந்தது.


ராமநாதபுரம் ஆண்ட்ரூஸ் பள்ளி கூட்ட அரங்கத்தில் நடந்த விழாவிற்கு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் வெண்ணிலா தலைமை வகித்தார். மக்கள் தொடர்பு அதிகாரி சாதனா, பரமக்குடி செயற்பொறியாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர்.


இதில் 30 பள்ளிகளில் அமைக்கப்பட்ட ஆற்றல் மன்றம் சார்பில் மின்சிக்கன வார விழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம்,சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.


தமிழ்நாடு அறிவியல்இயக்கம் ராமநாதபுரம்மாவட்ட தலைவர் லியோன், செயலாளர் காந்தி, மாவட்ட துணைத் தலைவர் நவநீதகிருஷ்ணன், துணைச் செயலாளர் விஜயராம், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், மின்வாரிய செயற்பொறியாளர் பட்டுராஜா, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement