துப்பாக்கியுடன் போலீஸ் திருநெல்வேலியில் ரோந்து
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர பகுதிகளில் வெளியூர்களில் இருந்து வந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சமீபத்தில், இங்கு மாவட்ட கோர்ட் முன்பாக வாலிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
தொடர்ந்து, குற்றத்தடுப்பு நடவடிக்கையாக துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் ஒருவர் உட்பட இரு போலீசார் மாநகர பகுதிகளில் டூ - வீலரில் ரோந்து செல்லும் பணியை போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி நேற்று துவக்கினார். மொத்தம், ஐந்து குழுவினர் இப்பணியில் ஈடுபடுகின்றனர். நிகழ்வில் போலீஸ் துணை கமிஷனர்கள் வினோத் சாந்தாராம், கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து (1)
அப்பாவி - ,
12 ஜன,2025 - 08:29 Report Abuse
அவனவன் கைத்துப்பாக்கு, ரிவால்வரோடு சுத்தறான். இவிங்க குருவி சுடற மாதிரி துப்பாக்கியோட ரோந்து. எப்போ எறக்கி, எப்போ பூட்டி?
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement