வட கொரியா வீரர்கள் 2 பேர் சிறைபிடிப்பு: உறுதிப்படுத்தினார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!

கீவ்: உக்ரைனில் வட கொரியா ராணுவ வீரர்கள் 2 பேர் சிறைப்பிடிப்பட்டு உள்ளனர் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.


உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வந்தாலும், இருநாடுகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. 'எங்களுக்கு எதிரான போரில் வடகொரிய ராணுவத்தை ரஷ்யா பயன்படுத்துவதாக' என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.


உக்ரைனுக்கு எதிரான போரில் உதவி செய்வதற்காக அதிநவீன ஏவுகணை தொழில்நுட்பத்தை வடகொரியாவுக்கு ரஷ்யா வழங்கியுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. அந்தத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஏவுகணையை தான் வடகொரியா சோதனை செய்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.


இந்நிலையில், இன்று (ஜன.,12) உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது: உக்ரைனில் வட கொரியா ராணுவ வீரர்கள் 2 பேர் சிறைப்பிடிப்பட்டு உள்ளனர். 2 பேர் பலத்த காயமுற்றனர். ஒருவரின் தாடையில் காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு ராணுவ வீரருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு வட கொரியா உதவி செய்து, வருகிறது. இது எளிதான காரியம் அல்ல.



உக்ரைனுக்கு எதிரான போரில் வட கொரியா ஈடுபட்டதற்கான எந்த ஆதாரத்தையும் அழிக்க, காயம் அடைந்த ராணுவ வீரர்களை தூக்கிலிடுவது வழக்கம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். வட கொரியா ராணுவ வீரர்கள் பலத்த காயம் அடைந்து இருக்கும் வீடியோ ஒன்றை, ஜெலன்ஸ்கி சமூகவலைதளத்தில் பகிர்ந்து உள்ளார்.

Advertisement