250 பவுன் கொள்ளை; ஒருவர் கைது; விசாரணைக்கு பயந்து பெண் தற்கொலை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மூலைக் கரைப்பட்டி அடகு கடையில் 250 பவுன் நகைகள் கொள்ளை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீஸ் விசாரணைக்கு பயந்து பிடிபட்டவரின் தாயார் தற்கொலை செய்து கொண்டார்.


திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் ரெமன் 45, என்பவரது நகை அடகு கடையில் 2024ம் ஆண்டு ஆக.22 ல் 278 பவுன் நகைகள், ரூ 3 லட்சம் பணம் கொள்ளை போனது. 5 மாதங்களாக துப்பு துலக்க முடியாத வழக்கில் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி தலைமையிலான குழு, மூலைக்கரைப்பட்டி அருகே ரெட்டார் குளத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணனை 40, கைது செய்தனர்.


அவரது வீட்டில் இருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் விசாரணைக்கு பயந்து அவரது தாயார் மீனாட்சி 68, இன்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement