ஐ.டி.,ரெய்டு; ரூ.750 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு?

ஈரோடு: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., உறவினர் ராமலிங்கம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.750 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.


ஈரோடு, செட்டிபாளையம் தெற்கு ஸ்டேட் பாங்க் நகரில் என்.ஆர். குரூப்ஸ்சின் ராமலிங்கம் கன்ஸ்ட்ரக் ஷன் கம்பெனி தலைமையகம் உள்ளது. இந்த நிறுவனம், வரி ஏய்ப்பு செய்திருப்பதாக கிடைத்த புகார் அடிப்படையில், ஈரோடு அடுத்த முள்ளாம்பரப்பில் உள்ள ஆர்.பி.பி.கன்ஸ்ட்ரக் ஷன் நிறுவனத்திலும் வருமான வரித்துறை சோதனை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.


ராமலிங்கம் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் நெருங்கிய உறவினராவார். கடந்த 5 நாட்களாக 26 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.10 கோடி ரொக்கம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.750 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement