ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: பா.ஜ., கூட்டணி புறக்கணிப்பு
சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., கூட்டணியும் புறக்கணிப்பதாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிவித்து உள்ளார்.
@1brஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்.,5 ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு தி.மு.க., சார்பில் சந்திரகுமார் களமிறங்கி உள்ளார். இந்த தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வும், தே.மு.தி.க.,வும் புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளன.
இந்நிலையில், இத்தொகுதியில் போட்டியிடுவது குறித்து பா.ஜ., நிர்வாகிகளுடன் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார்.
இதன் பிறகு அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் நடந்து வரும் மக்கள் விரோத ஆட்சியைப் பார்த்து வருகிறோம். எல்லா துறைகளிலும், ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, வேலைவாய்ப்பின்மை, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், அரசு அதிகாரிகள், போலீசார் என யாருக்குமே பாதுகாப்பின்மை என தமிழகம் ஒரு இருண்ட காலத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
அம்பேத்கர் வழங்கிய அரசியலமைப்பு சட்டத்திற்கு நேர் எதிரக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது தி.மு.க., அரசு. இந்த ஆட்சியின் அவலங்களைத் தினந்தோறும் சகித்துக் கொண்டுள்ள மக்கள், இது திராவிட மாடல் இல்லை , Disaster மாடல் என உரக்கச் சொல்லத் துவங்கிவிட்டனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை, நடைபெறவிருப்பது, இடைத்தேர்தலுக்கான இடைத்தேர்தல். கடந்த 2023ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலின் போது, பொது மக்களை பட்டியில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தியதைப் பார்த்தோம். ஆளுங்கட்சி என்ற அதிகார மமதையில் தி.மு.க., தேர்தல் விதிமுறைகளை எல்லாம் மீறிச் செயல்பட்டதை நாம் அனைவருமே எதிர்கொண்டோம்.
வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல், தி.மு.க.,வை முழுமையாக அகற்றவிருக்கும் தேர்தல். அந்த இலக்கை நோக்கியே தே.ஜ., கூட்டணி தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் நடுவே, இடைத்தேர்தலில் மீண்டும் கால்நடைகளைப் போலப் பொதுமக்கள் அடைத்து வைக்க தி.மு.க.வை அனுமதிக்க தே.ஜ., கூட்டணி விரும்பவில்லை.
மக்கள் நலன் விரும்பும் தே.ஜ., கூட்டணிக் கட்சி தலைவர்கள் அனைவரும் நன்கு ஆலோசித்த பிறகு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி புறக்கணிப்பதாக முடிவெடுத்துள்ளோம். 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை அகற்றி மக்களுக்கான தே.ஜ., கூட்டணியின் நல்லாட்சியை வழங்குவதே எங்கள் இலக்கு. இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (22)
venugopal s - ,
12 ஜன,2025 - 17:51 Report Abuse
நான் கூட உண்மையிலேயே அண்ணாமலை ஒரு தைரியசாலி என்று தவறாக நினைத்து விட்டேன்!
0
0
Reply
சம்பா - ,
12 ஜன,2025 - 17:45 Report Abuse
வாக்காளர் கவனிப்பு
இருக்காது இனி
போட்டி. தி.மு.க
நா.த.க.தான் வர்க்காளர் எதிர்பார்பு பொய்து போகும்
0
0
Reply
Mathan - ,இந்தியா
12 ஜன,2025 - 17:35 Report Abuse
பாவம் ஈரோடு மக்கள். வாக்காளர் உரிமை தொகை கிடைக்காது.
0
0
Reply
Tamil Inban - Singapore,இந்தியா
12 ஜன,2025 - 17:29 Report Abuse
எதிரியை களத்தில் எதிர்க்கும் துணிச்சல் உள்ளவர்தான் தலைவருக்கு தகுதியானவர். வாய் சவடால் தேவையில்லாதது
0
0
Reply
Bahurudeen Ali Ahamed - aranthangi,இந்தியா
12 ஜன,2025 - 17:28 Report Abuse
நோ கமெண்ட்ஸ்
0
0
Reply
kannan - Bangalore,இந்தியா
12 ஜன,2025 - 17:11 Report Abuse
கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி , பாஜக கட்சி ஈரோடு தேர்தலை புறக்கணிக்கிறது . டெப்பாசிட்டை மிச்சம் பிடிக்க இது ஒரு உத்தி.
0
0
Reply
NACHI - ,
12 ஜன,2025 - 17:07 Report Abuse
மக்களை ஏமாற்றி விட்டார்கள் எதிர் கட்சிகள்..???
0
0
Reply
Seekayyes - ,
12 ஜன,2025 - 16:57 Report Abuse
OK, இனி இந்த இடை, இடை தேர்தலில் ஈ.வெ. ராமசாமியையும், திமுகவையும் எதிர்ப்பவர்கள் ஒன்று திரண்டு நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடும்படி கேட்டு கொள்கிறேன்.
0
0
Reply
Laddoo - Bangalorw,இந்தியா
12 ஜன,2025 - 16:47 Report Abuse
திருட்டு த்ரவிஷத்தை கருவறுக்க வேண்டிய நிலையில் நீங்கள் புறக்கணித்தது சரியல்ல
0
0
Balaji Radhakrishnan - ,
12 ஜன,2025 - 17:07Report Abuse
He took the correct decision.
No waste of money and no waste of time.
0
0
Reply
ManiK - ,
12 ஜன,2025 - 16:41 Report Abuse
There is a goof chancr for great strategy by opposition parties. Let all non-திமுக கும்பல் vote for நாம் தமிழர். That will open discussion for alliance.
0
0
Reply
மேலும் 11 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement