இந்தியாவை வளர்ந்த நாடாக இளைஞர் சக்தி மாற்றும்: பிரதமர் மோடி நம்பிக்கை

1


புதுடில்லி: '' இந்தியாவை வளர்ந்த நாடாக இளைஞர் சக்தி மாற்றும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது,'' எனப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.


சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு, டில்லியின் பாரத் மண்டபத்தில் நடக்கும் வளர்ந்த இந்தியாவின் இளைய தலைவர்கள் மாநாடு நடந்தது. இதனை துவக்கி வைத்து, அங்கு நடந்தகண்காட்சி, கலாசார நிகழ்வுகள், உள்ளிட்டவற்றை பிரதமர் மோடி பார்வையிட்டு இளைஞர்களுடன் கலந்துரையாடினார்.


பிறகு அவர் பேசியதாவது: இன்று உலக நாடுகள் சுவாமி விவேகானந்தரை நினைவுகூர்ந்து போற்றி வருகின்றன. நாட்டின் இளைஞர்கள் மீது அவர் பெரிய நம்பிக்கை வைத்து இருந்தார். அவர் எப்போதும், இளைய தலைமுறை, புதிய தலைமுறை மீது நம்பிக்கை உள்ளது எனக்கூறுவார். எனது ஊழியர்கள் இளைய தலைமுறையில் இருந்து வந்தவர்கள் என்பார். அவரைப்போல் நானும், உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். விவேகானந்தர் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். அனைத்தும் மீதும் நம்பிக்கை வைத்து இருப்பேன் என்றார். இந்திய இளைஞர்களுக்காக அவர் என்ன செய்தாரோ, என்ன நனைத்தாரோ அதன் மீது எனக்கு அபரிமிதமான நம்பிக்கை உள்ளது.


அனைத்து பிரச்னைகளுக்கும் இளம் தலைமுறையினர் தீர்வு காண்பார்கள் என விவேகானந்தர் கூறினார். அதில் முற்றிலும் எனக்கு நம்பிக்கை உள்ளது.இந்தியாவை வளர்ந்த நாடாக இளைஞர் சக்தி மாற்றும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. தகவல்களை மட்டும் கணக்கிடும் நபர்கள், அது சாத்தியம் இல்லை என நினைக்கலாம். ஆனால் நோக்கம் என்பது பெரியது. ஆனால், அது முடியாதது அல்ல.இந்தியா முன்னேறி செல்ல, பெரிய இலக்குகள் நிர்ணயிக்க வேண்டும். இன்று அதனை இந்தியா செய்து கொண்டு உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement