போர் நிறுத்த ஒப்பந்தம், பிணைக்கைதிகள் விடுவிக்க நடவடிக்கை: ஜோ பைடன், நெதன்யாகு ஆலோசனை!
வாஷிங்டன்: காசா போர் நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான தற்போதைய நிலைமை குறித்து, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் சந்தித்து பேசினார்.
இஸ்ரேல், ஹமாஸ் இடையே நீண்ட காலமாக மோதல் நடந்து வருகிறது. போர் நிறுத்தத்தை கொண்டு வர பல்வேறு நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டன. ஆனால் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இந்நிலையில், காசா போர் நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான தற்போதைய நிலைமை குறித்து, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் சந்தித்து பேசினார்.
இது குறித்து, இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து அமெரிக்க அதிபரிடம் பிரதமர் நெதன்யாகு விவாதித்தார். பயங்கரவாதிகளிடம் சிக்கி உள்ளவர்களை விடுவிப்பதை முன்னெடுப்பது குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவுக்கு, பெஞ்சமின் நெதன்யாகு நன்றி தெரிவித்தார். ' மனிதாபிமான உதவிகளை அதிகரிக்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமரிடன் பைடன் வலியுறுத்தி உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.