இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்; சென்னையில் தொடரும் அதிர்ச்சி

4


சென்னை: சென்னையில் கடற்கரைகளில் அடுத்தடுத்து 37 ஆமைகள் உயிரிழந்து கிடந்த சம்பவம் வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நெம்மேலி குப்பம் கடற்கரையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் 20 ஆமைகள் இறந்து கிடந்தன. அதேபோல, ஈஞ்சம்பாக்கம் கடற்கரை பகுதியில் 8 ஆமைகள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


கடந்த இரு தினங்களுக்கு முன்பும் இதேபோன்று உயிரிழந்த ஆமைகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தற்போதும் கொத்து கொத்தாக ஆமைகள் இறந்திருப்பது விலங்குகள் நல ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நெம்மேலிகுப்பம் பகுதியில் கடல்நீரை குடிநீராக்கும் பணிகளுக்காக கட்டப்பட்டுள்ள தடுப்புகளினால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்று வனத்துறையினர் கருதுகின்றனர்.


இது குறித்து சென்னையைச் சேர்ந்த வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், "மீனவர்கள் மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படும் வலைகளில் ஆமைகள் சிக்கி இதுபோன்று உயிரிழந்திருக்கலாம். ஆமைகள் பாதுகாப்பு குறித்து மீனவர்களிடையே வனத்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்", என்று கூறினார்.

Advertisement