அரசியல் பின்புலம் இல்லாத பெண்கள்; பா.ஜ., எதிர்கால திட்டம் இதுதான்!

7


புதுடில்லி: அரசியல் பின்புலம் இல்லாத பெண்களை கட்சியின் அனைத்து நிலைகளிலும் பொறுப்புக்கு கொண்டு வர பா.ஜ., திட்டம் வகுத்துள்ளது.


இது தொடர்பாக, பா.ஜ., மூத்த தலைவர்கள் கூறியுள்ளதாவது: நாட்டின் அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்தியில் ஆளும் பா.ஜ., வலியுறுத்தி வருகிறது. பெண் சக்தியே நாட்டை வழி நடத்துகிறது என, பிரதமர் மோடி அடிக்கடி குறிப்பிடுவார். இதை கட்சி அமைப்புகளில் நடைமுறைப் படுத்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.


ஏற்கனவே, கட்சியில் இருக்கும் தலைவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு பதவி கொடுத்தால், மீண்டும் மீண்டும் ஒரு குடும்பத்திடமே அதிகாரம் கொடுப்பதாக அமைந்துவிடும். எனவே அரசியல் பின்புலம் இல்லாத பெண்களை, கட்சியின் அனைத்து நிலைகளில் நியமித்து, அவர்களை எதிர்காலத்துக்கு தயார் செய்வதே கட்சி தலைமையின் நோக்கம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.



பார்லிமென்ட் மட்டும் சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நடைமுறைக்கு வரும் போது பெண் வேட்பாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே பா.ஜ., கட்சி இப்போதே தயாராகி வருகிறது.

Advertisement