சென்னையில் பூனைகள் கண்காட்சி; மும்பை, கோவை, பெல்காமில் இருந்து வந்த நகரப் பூனைகள்

சென்னை: சென்னையில் Feline club of India ஏற்பாடு செய்த 83வது மற்றும் 84வது சாம்பியன்ஷிப் பூனை கண்காட்சியில், மும்பை, கோவை, பெல்காம் நகர பூனைகள் பங்கேற்றன.

சென்னையில் நேற்று, 83வது மற்றும் 84வது சாம்பியன்ஷிப் பூனை கண்காட்சி கோலாகலமாக நடந்தது. இந்த நிகழ்வில் 10க்கும் மேற்பட்ட இனங்களைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட பூனைகள் கலந்து கொண்டன. மும்பை, கோவை, பெல்காம் மற்றும் சென்னை போன்ற நகரங்களிலிருந்து பூனைகள் பங்கேற்றன.


'தங்கள் செல்லப்பிராணிகளை காட்சிப்படுத்தியதால், உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பூனைகளை கண்காட்சியில் பார்த்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பூனைகள் அனைத்து முழுமையாக அலங்கரிக்கப்பட்டு இருந்தன. இது குறித்து கண்காட்சியில் பங்கேற்ற ஒருவர் கூறியதாவது: நான் தனது பாரசீக பூனைகளான ஹனி, சிம்பா ஆகிய பூனைகளை அழைத்து வந்துள்ளேன்.



நான் கடந்த 12 ஆண்டுகளாக பூனைகளை வளர்த்து வருகிறேன். அவை மிகவும் நட்பானவை, ஆனால் பலருக்கு அவற்றை எப்படி பராமரிப்பது என்று தெரியவில்லை. உதாரணமாக, பூனைகளுக்கு ஒருபோதும் பால் கொடுக்கக்கூடாது, பூனை தீவனம் மட்டுமே கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


மற்றொரு பங்கேற்பாளர் ஒருவர் கூறியதாவது: ஒவ்வொரு இனத்திற்கும் அதன் தனித்துவமான தன்மை உள்ளது. பூனைகள் அமைதியானவை. பராமரிப்பு செலவு மிகவும் குறைவு. நகர்ப்புற வீடுகளுக்கு ஏற்றதாக அமைகின்றன.இந்த நிகழ்ச்சி வெறும் போட்டி மட்டுமல்ல.


மனிதர்களுக்கும், பூனைகளுக்கும் இடையே உள்ள உறவை கொண்டாடும் நிகழ்ச்சியாக பார்க்கிறேன். தத்தெடுப்பு முகாமும் இடம்பெற்றுள்ளது. பார்வையாளர்களுக்கு தேவைப்படும் பூனைகளை அவர்களது வீடுகளுக்கு வழங்கும் வாய்ப்பு கிடைத்தது என்றார்.

Advertisement