கூடுதலாக ரூ.10 தர மறுப்பு; மாஜி ஐ.ஏ.எஸ்., அதிகாரியை தாக்கிய பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ரூ.10 கூடுதலாக கொடுக்க மறுத்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியை பஸ் கண்டக்டர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆர்.எல். மீனா, கடந்த ஜன.,10ம் தேதி பஸ்ஸில் பயணம் மேற்கொண்டார். அப்போது, ரூ.10 கூடுதல் கட்டணமாக கண்டக்டர் ஞான்சியாம் சர்மா கேட்டுள்ளார். அதனை தர ஆர்.எல்.மீனா மறுத்துள்ளார்.
இதனால், கடுப்பான கண்டக்டர், ஆக்ரா சாலையில் உள்ள கனோடா பஸ் நிறுத்தத்தில் அவரை இறக்கி விடாமல், அடுத்த ஸ்டாப்பில் இறங்கச் சொல்லியிருக்கிறார்.
இதனால், இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, கண்டக்டர் சர்மா, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீனாவை தாக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது.
இதையடுத்து, பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில், கண்டக்டர் ஞான்சியாம் சர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரை சஸ்பெண்ட் செய்து ஜெய்ப்பூர் நகர போக்குவரத்து சேவை இயக்குநரகம் உத்தரவிட்டது.