'இசட்' வடிவ சுரங்கப்பாதை: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' வடிவ சுரங்கப் பாதையை, பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன.,13) நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
ஜம்மு - காஷ்மீரின் கந்தேர்பால் மாவட்டத்தில் உள்ள காகங்கீர் மற்றும் சோனாமார்க்கை இணைக்கும் வகையில் 'இசட்' வடிவ சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் - லே இடையிலான தேசிய நெடுஞ்சாலையில், 2,700 கோடி ரூபாய் செலவில் 6.5 கி.மீ., நீளத்திற்கு கட்டப்பட்டுள்ள இசட் வடிவ சுரங்கப் பாதை, கடல் மட்டத்திலிருந்து 8,652 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
ரயில்வே சுரங்கப்பாதையாகவும் இதை பயன்படுத்தும் அளவுக்கு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இமயமலை புவியியலைக் கருத்தில் கொண்டு, நியூ ஆஸ்ட்ரியன் சுரங்க முறையில், இந்த இசட் வடிவ சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
சோனாமார்க் நகர மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையவுள்ள இந்த சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன.,13) நாட்டுக்கு அர்ப்பணித்தார். கடுமையான பருவநிலைகளை பொருட்படுத்தாமல் சுரங்கப் பாதை கட்டுமானத்துக்கு அயராது பணியாற்றிய தொழிலாளர்களை சந்தித்து, பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் அவர்களை பாராட்டினார்.
வாசகர் கருத்து (8)
N.Purushothaman - Cuddalore,இந்தியா
13 ஜன,2025 - 14:18 Report Abuse
வாழ்த்துக்கள் ....அவசர காலங்களில் ராணுவ டாங்கிகள் மற்றும் ராணுவ தளவாடங்கள் எடுத்த செல்ல முடியும் என்பதால் பாக்கி மற்றும் சீனாக்காரன் கடுப்புல இருக்கான்.. இந்த திட்டம் வட இந்தியா என்பதால் இது சாத்தியமாயிற்று. இது போன்ற திட்டம் தமிழகத்திற்கு வந்தால் ஆளும் கட்சியா இருக்குறப்போ கையெழுத்து போட்டுட்டு எதிர்கட்சியானவுடனே அந்த திட்டத்தை எதிர்ப்பானுங்க ...அது யாருன்னு கண்டுபுடிங்க ? ...
0
0
Reply
Mediagoons - ,இந்தியா
13 ஜன,2025 - 14:18 Report Abuse
எந்த வாடில் இருந்தால் என்ன ? மக்கள் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது
0
0
Reply
Raj - ,இந்தியா
13 ஜன,2025 - 13:52 Report Abuse
16 கோடியில் கட்டின பாலம் தண்ணீரில் போயிற்று. மீண்டும் பாலம் கட்ட 32 கோடி செலவில் கட்டப்படம்
0
0
Reply
தியாகு - கன்னியாகுமரி,இந்தியா
13 ஜன,2025 - 13:24 Report Abuse
மோடிஜி திறந்து வைத்த சுரங்க பாதையை பாருங்கள், தேசிய கொடி மட்டும் வைத்து எவ்வளவு தூய்மையாக இருக்கிறது. இதுவே கட்டுமர திருட்டு திமுக திறந்து வைத்திருந்தால் கட்டுமர போட்டோ, சர்வாதிகாரி போட்டோ, அகில உலக துணை நடிகர் சூப்பர் ஸ்டார் உதைணா போட்டோவுடன் மொத்த சுவற்றையும் நாறடித்திருப்பார்கள்.
0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
13 ஜன,2025 - 12:59 Report Abuse
இதுமாதிரி பாதைகளையெல்லாம் இங்கு அனுமதிக்க மாட்டோம். ஏற்காதாவது திராவிட பாதை அமைத்தால் சினிமா உள்ள ஜால்ராக்களும் சத்தமா ஜால்றாவைய்ய தட்டுவோம்
0
0
V வைகுண்டேஸ்வரன் - Chennai,இந்தியா
13 ஜன,2025 - 13:28Report Abuse
தமிழ் நாட்டுக்குத் தேவையான நிறைய மேம்பாலங்கள் கலைஞர் கட்டியிருக்கிறார், ஸ்டாலின் கட்டியிருக்கிறார். இவற்றை நீங்கள் திராவிட பாதைகள் என்கிறீர்கள் என்றால் சந்தோஷம். "
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement