பெண்கள் ஹாக்கி: சூர்மா அணி வெற்றி
ராஞ்சி: பெண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் சூர்மா அணி 4-1 என பெங்கால் அணியை வீழ்த்தியது.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில், பெண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் முதல் சீசன் நடக்கிறது. மொத்தம் 4 அணிகள் பங்கேற்கின்றன. லீக் போட்டியில் பெங்கால், சூர்மா கிளப் (பஞ்சாப், ஹரியானா) அணிகள் மோதின. அபாரமாக ஆடிய சூர்மா அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சூர்மா அணி சார்பில் ஒலிவியா ஷனான் (38 வது நிமிடம்), சார்லோட்டி (42வது), சலிமா (44வது), சோனம் (47வது) தலா ஒரு கோல் அடித்தனர். பெங்கால் அணிக்கு ஹன்னா கோட்டர் (7வது நிமிடம்) ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement