பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா துவக்கம்; வானை அலங்கரித்த வண்ண பலூன்கள்!
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 10வது சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழா இன்று துவங்கியது.
கடந்த 9 வருடமாக, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவை தமிழக அரசு சுற்றுலாத்துறை தனியார் அமைப்புடன் இணைந்து நடத்தி வருகின்றது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று (ஜன.,14) பொள்ளாச்சியில் 10வது சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழா இன்று துவங்கியது. 8 பலுான்கள் வானில் பறக்க விடப்பட்டன. 4 பலுான்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பேர், வண்ண பலுான்களை வேடிக்கை பார்த்துச் செல்கின்றனர்.
இன்று மாலை, சிறுவர், சிறுமியரை கட்டண அடிப்படையில் பறக்கச் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த திருவிழாவில் அமெரிக்கா, தாய்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பலுான்கள் பறக்க விடப்பட்டுள்ளன. வரும் ஜனவரி 16ம் தேதி வரை பலூன் திருவிழா நடைபெறும். ஜனவரி 18, 19ம் தேதிகளில் மதுரையில் உள்ள கருணாநிதி நூற்றாண்டு பலூன் திருவிழா நடக்க உள்ளது.
ஜனவரி 12ம் தேதி வரை சென்னை கிழக்கு கடற்கரை சாலை கோவளம் அருகே உள்ள திருவிடந்தையில் பலூன் திருவிழா நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement