இந்தியாவுக்கு நான்கு தங்கம் * ஆசிய துடுப்பு படகு போட்டியில்...
ஹாங்காங்: ஆசிய துடுப்பு படகு போட்டி கடைசி நாளில் இந்தியா நான்கு தங்கப்பதக்கம் கைப்பற்றியது.
ஹாங்காங்கில் ஆசிய கோப்பை துடுப்பு படகு போட்டி நடந்தது. பெண்களுக்கான 200 மீ., பந்தயத்தில் இந்தியாவின் பார்வதி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார். பெண்களுக்கான 500 மீ., பிரிவு போட்டியில் இந்தியாவின் பார்வதி, பூஜா ஜோடி தங்கப்பதக்கம் வசப்படுத்தியது.
ஆண்களுக்கான 500 மீ., பிரிவில் இந்திய வீரர் ஞானேஷ்வர் சிங், 200 மீ., போட்டியில் சுனில் சிங் என இருவரும் தங்கம் கைப்பற்றினர். 23 கி.மீ., மாரத்தான் போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் சிங் தங்கம் வென்றார்.
முன்னதாக 1000 மீ., பிரிவு பந்தயத்தில் இந்தியாவின் சோனியா தேவி முதலிடம் பிடித்தார். தவிர 23 வயதுக்குட் பட்டோருக்கான 1000 மீ., போட்டியில் இந்தியாவின் தனமஞ்சுரி தேவி, ஆண்கள் இரட்டையரில் ஹிமான்சு, அக்சித் ஜோடி தங்கப்பதக்கம் வென்றது.
ஆண்களுக்கான 1000 மீ., போட்டியில் இந்தியாவின் நாவோசா சிங், இரண்டாவது இடம் பிடித்தார். ஒட்டுமொத்தமாக இத்தொடரில் இந்தியா 8 தங்கம், 1 வெள்ளி என 8 பதக்கம் கைப்பற்றியது.