அம்பேத்கர் படைப்புகள் தமிழாக்கம் வெளியீடு

சென்னை: அம்பேத்கரின் படைப்புகளை, 10 தொகுப்புகளாக தமிழாக்கம் செய்து அரசு வெளியிட்டுள்ளது.


அம்பேத்கரின் படைப்புகள், தமிழ் இளைஞர்கள் எளிமையாக வாசிக்கும் வகையில், புலவர் கவுதமன், பேராசிரியர்கள் அரசு மற்றும் வளர்மதி, கல்லுாரி கல்வி இயக்க முன்னாள் துணை இயக்குனர் மதிவாணன் ஆகியோரின் மேற்பார்வையில், பிறமொழி கலப்பின்றி மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன. தமிழ் வளர்ச்சி துறை வாயிலாக, இவை, 10 தலைப்புகளில், நேற்று வெளியிடப்பட்டு உள்ளன.


ஒவ்வொரு தொகுதியும், 300 பக்கங்கள் அளவில் நுாலாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்த 10 தொகுதிகளை, தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.


செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், தலைமை செயலர் முருகானந்தம், செய்தித் துறை செயலர் ராஜாராமன் பங்கேற்றனர்.

Advertisement