பென்ஸ் 'எலக்ட்ரிக் - ஜி' எஸ்.யு.வி.,களின் 'காட் பாதர்'

'மெர்சிடிஸ் பென்ஸ்' நிறுவனம், அதன் 'இ.க்யு.ஜி., 580' என்ற மின்சார எஸ்.யு.வி., காரை அறிமுகப்படுத்தி உள்ளது. இது, 'ஜி - கிளாஸ்' இன்ஜின் காரின், மின்சார வகை எஸ்.யு.வி., ஆகும்.

பேட்டரி பொருத்தப்படும் வகையில் கட்டமைப்பு மாற்றம், முன்புற மற்றும் பின்புற பம்பர்கள், 21 அங்குல அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை இந்த காரில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள். இதில் 116 கி.வாட்.ஹார்., திறன் கொண்ட, லித்தியம் அயான் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

ஒரு சார்ஜில், 473 கி.மீ., தூரம் பயணிக்கலாம் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பேட்டரியை சார்ஜ் செய்ய 32 நிமிடம் ஆகிறது. தண்ணீரில் பயணிக்கும் திறன், 850 எம்.எம்., ஆகவும், கிரவுண்ட் கிளியரன்ஸ் 250 எம்.எம்., ஆகவும் உள்ளது. பூட் ஸ்பேஸ் 455 லிட்டர் ஆகும்.

ஒரே இடத்தில், கார் 320 டிகிரி சுழலும் வகையில் 'ஜி - டர்ன்' வசதி, எளிதாக யு- டர்ன் செய்ய 'ஜி - ஸ்டீயரிங்' வசதி, 2 முதல் 15 கி.மீ., வேகத்தில் ஆப்ரோட் பயணத்தை மேற்கொள்ள 'ஆப்ரோட் கிரால்' வசதி ஆகிய தனித்துவமான சிறப்பம்சங்கள் இந்த காருக்கு உண்டு.

இதன் முன்பதிவு, கடந்த ஜூலை மாதம் துவங்கிய நிலையில், நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு வரை இதன் முன்பதிவுகள் நிறைவு பெற்றுள்ளன. இதன் விலை, 'ஏ.எம்.ஜி., ஜி 63' காரை விட, 64 லட்சம் ரூபாய் குறைவாக உள்ளது.

விலை: ரூ. 3 கோடி



விபரக்குறிப்பு



பேட்டரி: 116 கி.வாட்.ஹார்.,

மோட்டர் பவர்: 587 ஹெச்.பி.,

டார்க்: 1,164 என்.எம்.,

ரேஞ்ச்: 473 கி.மீ

(0 - 100 கி.மீ.,) பிக்கப் - 4.7 வினாடி

டாப் ஸ்பீடு - 180 கி.மீ.,

Advertisement