மதுரை -தூத்துக்குடி ரயில் பாதை திட்டத்தில் பிரச்னை எதுவும் இல்லை; மத்திய அமைச்சர் விளக்கம்
சென்னை: மதுரை- தூத்துக்குடி ரயில் பாதை திட்டத்தில் எந்த பிரச்னையும் இல்லை என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார்.
@1brசென்னையில் கடந்த 10ம் தேதி (ஜன) பெரம்பூர் ஐ.சி.எப்., ரயில் பெட்டி தொழிற்சாலையில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களை சந்தித்தார். அப்போது, மதுரை-தூத்துக்குடி திட்டத்தை கைவிட தமிழக அரசு கோரியதாக கூறியிருந்தார்.
அவரின் பேட்டி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ரயில்வே திட்டத்துக்கு தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என்று விமர்சனங்களும் எழுந்தன. ஆனால், இந்த திட்டத்தை கைவிடுமாறு தமிழக அரசு ஒருபோதும் கூறவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் கூறி இருந்தார்.
எதிர்க்கட்சிகள் சார்பில் தமிழக அரசின் நிலையை கண்டித்து போராட்டமும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மதுரை தூத்துக்குடி ரயில்வே திட்டத்துக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து, தெற்கு ரயில்வே தரப்பில் விளக்க அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது;
2025ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி சென்னை பெரம்பூர் ஐ.சி.எப்.பில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது தமிழக ரயில்வே திட்டங்கள் குறித்து ஒரே நேரத்தில் நிருபர்கள் பல கேள்விகள் கேட்டனர். பேட்டி நடந்த ரயில்வே பணிமனையில் ஒரே இரைச்சல் ஆகவும் இருந்தது.
அப்போது மதுரை-தூத்துக்குடி ரயில் திட்டம் குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் அதிக இரைச்சல் எதிரொலியாக, அந்த திட்டம் தனுஷ்கோடி ரயில் திட்டம் தொடர்பான கேள்வியாக அமைச்சர் எண்ணினார். ஆகவே அதற்கான பதிலைத் தான் அமைச்சர் கூறினார். நிலம் ஒதுக்கீடு மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னை காரணமாக தமிழக அரசு கைவிடலாம் என்று எழுத்துப்பூர்வமாக கேட்டுக் கொண்டதாக கூறியதாக தெரிவித்தார்.
அவர் அளித்த பதிலை கேள்வி கேட்ட நிருபர்கள், மதுரை-தூத்துக்குடி திட்டத்தை கைவிடுவதாக எடுத்துக் கொண்டனர். மதுரை- தூத்துக்குடி திட்டத்தில் தமிழக அரசால் எந்த பிரச்சனையும் இல்லை என்று மத்திய அமைச்சர் கூறி உள்ளார்.
தமிழக அரசு கைவிடும் படி கேட்டுக் கொண்டது தனுஷ்கோடி திட்டத்தை தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் தொடர்பு பிழை என்பது தொழிற்சாலையில் இயந்திரங்களின் இரைச்சல் காரணமாக நிகழ்ந்தது.
இவ்வாறு தெற்கு ரயில்வே அளித்துள்ள விளக்கத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (32)
Dharmavaan - Chennai,இந்தியா
15 ஜன,2025 - 17:28 Report Abuse
ஏன் இப்படி பேடித்தனமாக ஒன்று சொல்வதும் பின் பின்வாங்குவதும் பிஜேபிக்கு கேவலம்
0
0
Reply
Sivagiri - chennai,இந்தியா
15 ஜன,2025 - 17:25 Report Abuse
ஆக , ஆக. இப்போது சில உண்மைகள் மட்டும் பல பொய்கள் வெளியே வந்து விட்டன . . .திராவிட டெக்னீக் தில்லாலங்கடிகள் ,. ஓரளவுக்கு . . .
0
0
Reply
subramanian - Mylapore,இந்தியா
15 ஜன,2025 - 17:03 Report Abuse
காஞ்ச காஞ்சாநிதி எதற்காக தனுஷ்கோடி ராமேஸ்வரம் மீனவர்கள் வாழ்வில் மண்ணை வாரி வீசுகிறார்
0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
15 ஜன,2025 - 16:57 Report Abuse
மதுரை - துாத்துக்குடி ரயில் பாதை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த அமைத்த திருப்பரங்குன்றம், விளாத்திகுளம் அலுவலகங்கள் டிசம்பர் 31ம் தேதியுடன் மூடப்படும் என, விடியல் தமிழக அரசு அவற்றின் ஊழியர்களுக்கு தகவல் அனுப்பி மூடி விட்டதாம் ....15 வருடமாக 871 ஹெக்டேர் தேவை என்ற நிலையில், வெறும் 75 ஹெக்டேர் மட்டுமே திராவிடனுங்க நில ஆர்ஜிதம் செய்தது ....திட்டத்திற்கு தேவையான நிலத்தை கூட வாங்க இந்த விடியலுக்கு வக்கில்லை ...
0
0
Reply
அப்பாவி - ,
15 ஜன,2025 - 16:57 Report Abuse
அஸ்வின் தனுஷ்கோடி ந்நு சொன்னாராம். தூத்துக்குடின்னு கேட்டுச்சாம். அஸ்வத்தாமா
0
0
Reply
அப்பாவி - ,
15 ஜன,2025 - 16:55 Report Abuse
ஆஹா... காவி சாயம் வெளுத்துப் போச்சு டும்..டும்.டொம்
இனிமேலாவது எல்லாருக்கும் கேக்குற இடத்திலிருந்து பேசுங்கடா.. இரைச்சல் அதிகமாயிருந்திச்சாம். இவர் பேசுனது யாருக்கும் கேக்கலியாம். எம்.பி.ஏ படிச்சது இதுக்குத்தானா?
0
0
Reply
அப்பாவி - ,
15 ஜன,2025 - 16:52 Report Abuse
பாதைக்கு தேவையான நிலத்தை நீங்களே கையகப் படுத்துங்க.
0
0
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
15 ஜன,2025 - 17:15Report Abuse
அந்த நிலமெல்லாம் விடியல் மந்திரிங்க ஏற்கனவே கையகப்படுத்தி நல்ல விலைக்கு வெயிட் பண்றங்களாம்
0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
15 ஜன,2025 - 16:41 Report Abuse
தனுஷ்கோடிக்கு அரிச்சல்முனை வரை தேசிய நெடுஞ்சாலை அமைத்து 2017ல் திறந்து வைத்து அங்கு ஏராளமான சுற்றலா பயணிகள் .....ஆனால் இந்த படிக்காத விடியல் திராவிடனுக்கு தனுஷ்கோடிக்கு ரயில் பாதை அமைத்தால் அங்கு புயல் வந்து அடித்து கொண்டு போகுமாம் ..ஊரெங்கும் டாஸ்மாக் கடை திறந்து சாராய கம்பெனி நடத்தறவன் எல்லாம் விடியல் திராவிட மந்திரி ...சாராய குடித்து எவனும் சாக மாட்டான் .....ஆனால் ரயில் பாதை அமைத்தால் புயல் வந்து செத்துடுவான் என்று விடியல் ...
0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
15 ஜன,2025 - 16:31 Report Abuse
தனுஷ்கோடி புயலால் அழிந்து போனதாம் அதனால் இந்த படிக்காத விடியல் திராவிடனுங்க ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பாதை திட்டத்தை கைவிட்டுவிட்டார்களாம் ....அப்ப எதுக்கு விடியல் சுற்றுலாத்துறை தனுஷ்கோடி கடற்கரைக்கு உலகம் முழுவதிலுமிருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை , தமிழ்நாட்டின் தெற்கு முனையில் அமைந்துள்ள இந்த அற்புதமான கடற்கரை வரலாறு, தொன்மங்கள் மற்றும் அழகு நிறைந்த இடம் என்று விளம்பரம் செய்யுது ?? ...போய் புயலை பற்றி உன்னோடே விடியல் சுற்றுலா துறையிடம் சொல்லு ....இலையென்றால் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை புயல் அடித்து கொண்டு போயிட போகுது ....
0
0
Reply
chandrasekar - madurai,இந்தியா
15 ஜன,2025 - 16:20 Report Abuse
அதெல்லாம் சரி... மதுரை – திருப்பரங்குன்றம் – அருப்புக்கோட்டை – துாத்துக்குடி ரயில்பாதை வருமா வராதா... கிரிஸ்டல் கிளியராக பதில் வேண்டும். வரும் என்றால் எப்போது முடியும். வராது என்றால் இதுவரை செலவழித்தது என்னாகும். பதில் சொல்லுமா ரயில்வே...
0
0
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
15 ஜன,2025 - 16:47Report Abuse
இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த அமைத்த திருப்பரங்குன்றம், விளாத்திகுளம் அலுவலகங்கள் டிசம்பர் 31ம் தேதியுடன் மூடப்படும் என, விடியல் தமிழக அரசு அவற்றின் ஊழியர்களுக்கு தகவல் அனுப்பி மூடி விட்டதாம் ....அதனால் இந்த கேள்வி விடியலைத்தான் கேட்கனும் ....15 வருடமாக 871 ஹெக்டேர் தேவை என்ற நிலையில், வெறும் 75 ஹெக்டேர் மட்டுமே திராவிடனுங்க நில ஆர்ஜிதம் செய்தது
0
0
Reply
மேலும் 20 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement