தெப்பக்காடு முகாமில் யானைப்பொங்கல்; சுற்றுலா பயணிகள் உற்சாகம்

1


கூடலூர்: நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமில் நடந்த யானைப்பொங்கல் விழாவில், சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

Latest Tamil News
முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு யானைகள் முகாம் அமைந்துள்ளது. இங்கு வனத்துறை சார்பில் பராமரிக்கப்படும் யானைகள் இங்கு உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப்பயணிகள் விரும்பி வரக்கூடிய இடங்களில் இதுவும் ஒன்று.
Latest Tamil News

இங்கு ஆண்டு தோறும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்படும். இன்று வனத்துறை சார்பில் மண் பானைகளில் பொங்கல் வைத்து பொங்கல் விழா கொண்டாடினர்.
Latest Tamil News
விழாவை முன்னிட்டு வளர்ப்பு யானைகள் அலங்கரிக்கப்பட்டு வரிசையாக நிறுத்தப்பட்டன. யானைகளுக்கு பொங்கல், பழம், கரும்பு ஆகியவை வழங்கப்பட்டன.
Latest Tamil News

விழாவில் பழங்குடியினர் பாரம்பரிய இசையுடன் நடனம் ஆடினர். திரளாக சுற்றுலா பயணிகள் விழாவில் கலந்து கொண்டு யானைப்பொங்கலை ரசித்தனர்.
Latest Tamil News

Advertisement